வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் அவசியமில்லை

வெளிநாடுகளில் அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் எந்த அவசியமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் கூறியது போல் அரசாங்கத்தினர் அமெரிக்காவின் எம்.சீ.சீ உடன்படிக்கையை இரத்துச் செய்தால், அதற்கும் எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.